இதய நோய் ஆபத்தை தவிர்க்க ஆய்வுகள் கூறுவதென்ன?

12-நவ்-2024

மரபணு கோளாறுகளைத் தவிர, 80 - 90 % வரையுள்ள இதய நோய் தொடர்பான ஆபத்து காரணிகளைத் தவிர்த்தால், இதய நோய் ஆபத்தைத் தடுக்கலாம் என்று பிரபலமான 'இன்டர்ஹார்ட்' ஆய்வு கூறுகிறது.

12-நவ்-2024

நம் நாட்டில், பாரம்பரிய உணவு, வாழ்க்கை முறை பழக்கங்களை தவிர்த்து, விரைவான நகரமயமாதல், மேற்கத்திய உணவு, வாழ்க்கை முறையை பின்பற்றுவதால், இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.

12-நவ்-2024

நம் மரபணுவிற்கு நாள் முழுதும் சுறுசுறுப்பாக வேலை செய்வது தான் வழக்கம். இதற்கு நேர் மாறாக தற்போது ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழலும் உள்ளது.

12-நவ்-2024

பொருளாதாரம் வளராத நிலையில், நம் முன்னோர்கள் தொற்று நோய், பசி போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை ஒப்பிடும் போது, செயற்கையான வாழ்க்கை முறைக்கு தற்போதைய தலைமுறை மாறியுள்ளது.

12-நவ்-2024

இதனால், வாழ்க்கை முறை மாற்ற நோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் அதிகரித்து வருகிறது; போதிய உடற்பயிற்சியின்மை, மன அழுத்தமும் இளம் வயதினரிடம் அதிகரித்துள்ளது.

12-நவ்-2024

மற்ற உறுப்புகளைப் போல இல்லாமல், இதயம் எப்போதும் இயங்க வேண்டும். இதயம் ஆரோக்கியமாக இருக்க அமைதியான மனநிலையுடன் விருப்பமான செயல்களை ஈடுபாடுடன் செய்வது முக்கியம்.

12-நவ்-2024

தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகில், உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பது குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் குறைவாக உள்ளது.

12-நவ்-2024

இது, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்த வழிவகை செய்கிறது.

12-நவ்-2024

பெரும்பாலும் நம் வாழ்க்கை 'சும்மா இருக்கும் உடல் மற்றும் அலையும் மனம்' என்று மாறிவிட்டது, இது மாரடைப்புக்கான பொதுவான அடிப்படை.

12-நவ்-2024

எனவே, ஆரோக்கியமான இதயத்துடன் நீண்ட காலம் வாழ உடல் செயல்பாடுகளை அதிகரித்து, மனதை 'ரிலாக்ஸ்' ஆக வைக்க வேண்டிய நேரம் இது.

12-நவ்-2024