காலநிலை மாற்றத்தால் உண்டாகும் தொண்டை வலிக்கு தீர்வு என்ன?
தற்போது மழை, வெயில் என மாறுபட்ட காலநிலை நிலவுகிறது.
இதனால், குளிர்ச்சியான பானங்களை அருந்துவது, தண்ணீரை காய்ச்சாமல் குடிப்பது உள்ளிட்ட ஒவ்வாமை பிரச்னைகளால் தொண்டை வலி ஏற்படலாம்.
தொண்டை வலிக்கு காலை, மாலையில் வெது வெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
காய்கறி சூப் உள்ளிட்ட அசைவ உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு கட்டுப்படுத்தப்படும்.
இது தற்காலிக தீர்வு மட்டுமே.
ஓரிரு நாட்களுக்கு மேல் வலி தொடரும் பட்சத்தில் கட்டாயமாக டாக்டரை அணுகி கலந்தாலோசிக்க வேண்டும்.