இரவு நேரத்தில் ஏன் தாமதமாக சாப்பிடக் கூடாது...?

28-நவ்-2025

இரவில் தொடர்ந்து தாமதமாக சாப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவு, உடலில் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாகும்.

28-நவ்-2025

தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்தது.

28-நவ்-2025

மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ், இன்சுலின் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை அதிகளவில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

28-நவ்-2025

எனவே, உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்த முதலில் உங்கள் இரவு நேர உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது முக்கியமான ஒன்றாகும்.

28-நவ்-2025

இரவில் தாமதமாக சாப்பிடும்போது தூங்குவதிலும் தாமதம் உண்டாவதால், தூக்க சுழற்சியில் பாதிப்பு உண்டாகிறது. இரவில் குழப்பமான கனவுகள் உண்டாவதற்கும் இது காரணமாக இருக்கலாம்.

28-நவ்-2025

இது பல இரைப்பை பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. உணவு சரியாக செரிமானமாகாமல் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதே இதற்குக் காரணம்.

28-நவ்-2025

இரவு நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இது பகலில் உள்ளதைப் போன்று கலோரிகளை எரிப்பதில் பயனுள்ளதாக இல்லாததால், உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.

28-நவ்-2025

சரியாக தூங்காத போது, மறுதினம் எரிச்சல் மற்றும் மோசமான மனநிலையுடன் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. உடல் கடிகாரத்திலும் குழப்பம் ஏற்படுவதால், பதட்டம், மனச்சோர்வுக்கு வாய்ப்புள்ளது.

28-நவ்-2025

இரவில் தாமதமாக சாப்பிட்டு விட்டு தூங்குவதை தொடர்ச்சியாக செய்யும் போது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்புக்கு வழிவகுக்கும்.

28-நவ்-2025