குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்புகள் இதோ...

03-டிச-2025

குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைச் சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும்.

03-டிச-2025

மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும்.

03-டிச-2025

எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும்.

03-டிச-2025

தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.

03-டிச-2025

குளிர்காலத்தில், கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து, பின்னுவது அல்லது கொண்டை போடுவது ஆகியவற்றை செய்யலாம். இதனால், குளிர்ந்த காற்றால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படும்.

03-டிச-2025

அடிக்கடி ஹேர் கலரிங், ஸ்ட்ரீக்கிங் செய்வது, ஆகியவற்றால், கூந்தலின் ஈரப்பதம் வறண்டு போவதால், அவற்றையும், சூடான சாதனங்களை கூந்தலில் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.

03-டிச-2025

கூந்தலில் இயற்கையான டைகள் பயன்படுத்தலாம். ட்ரையர்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

03-டிச-2025

குளிர்ந்த காற்றில் இருந்து கூந்தலை காப்பாற்ற, சில்க் துணிகளை பயன்படுத்தலாம்.

03-டிச-2025