இன்று சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம்!

13-ஆக்-2024

உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது.

13-ஆக்-2024

இவர்களது சாதனைகளை பாராட்டுதல், அவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுறுத்தி 1976-ம் ஆண்டு முதல் ஆக., 13ல் உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

13-ஆக்-2024

இடது கை பழக்கம் ஒருவருக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது.

13-ஆக்-2024

இது மூளை வளர்ச்சியை பொறுத்து அமைகிறது. இவர்கள் வலது பக்க மூளையை அதிகளவில் பயன்படுத்துவர்.

13-ஆக்-2024

இவர்களுக்கு ஞாபக திறன் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

13-ஆக்-2024

விளையாட்டுத் துறை, விஞ்ஞானம், பட்டிமன்றம் என அவர்கள் சில துறைகளில் நுட்பமாக செயல்பட்டு வெற்றி பெறுவார்கள் என கூறப்படுகிறது.

13-ஆக்-2024

இயற்கைக்கு மாறாக அவர்கள் இயங்கவில்லை, அவர்களுடைய இயல்பே அதுதான் என்பதை பெற்றோர்களும் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.

13-ஆக்-2024