புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

31-மே-2024

2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "புகையிலை தொழில் குறுக்கீட்டில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்"

31-மே-2024

புகையிலை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு உலகளவில் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

31-மே-2024

சிகரெட் தயாரிப்பதற்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது.

31-மே-2024

இந்தியாவில் 12 கோடி பேர் புகைக்கின்றனர். புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

31-மே-2024

புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

31-மே-2024

புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

31-மே-2024