உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு... 2 மணி நேர பயணம் 2 நிமிடமானது!

29-செப்-2025

நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கிலுள்ள குய்ஷோ மாகாணத்தில் 'ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன்' என்ற பெயரில் உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளது.

29-செப்-2025

இப்பாலம், ஆற்றின் மேற்பரப்பிலிருந்து, 2,051 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

29-செப்-2025

இரு மலைகளுக்கு இடையே 4,658 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டி முடிக்க மூன்றாண்டுகளுக்கு மேலானது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

29-செப்-2025

ஏற்கனவே, மிக உயரமான பாலம் என, பெயர் பெற்ற அப்பகுதியிலுள்ள பெய்பன்ஜியாங் பாலத்தின் 1,854 அடி உயரத்தை, இந்த புதிய பாலம் முந்தியுள்ளது.

29-செப்-2025

இதனால், இரு பகுதிகளுக்கு இடையேயான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 2 நிமிடங்களாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

29-செப்-2025

ஏற்கனவே, ஆயிரக்கணக்கான பாலங்களைக் கொண்ட மலைப்பாங்கான மாகாணமான குய்ஷோ, இப்போது உலகின் இரண்டு உயரமான பாலங்களை கொண்டு பெருமையடைகிறது.

29-செப்-2025

உலகின் 100 உயரமான பாலங்களில் கிட்டத்தட்ட பாதி, சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

29-செப்-2025