Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடுகளம்/ 3 நாள் பேட்மின்டன் போட்டி சிந்தனுாரில் இன்று துவக்கம்

3 நாள் பேட்மின்டன் போட்டி சிந்தனுாரில் இன்று துவக்கம்

3 நாள் பேட்மின்டன் போட்டி சிந்தனுாரில் இன்று துவக்கம்

3 நாள் பேட்மின்டன் போட்டி சிந்தனுாரில் இன்று துவக்கம்

ADDED : ஜூன் 13, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
சிந்தனுார் நகரில் இன்று முதல், மூன்று நாட்கள் வரை, 'பேமிலி ரிக்ரியேஷன் கிளப்' சார்பில், மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி நடக்கவுள்ளது.

இதுகுறித்து, பேமிலி ரிக்ரியேஷன் கிளப் தலைவர் சி.டி.பாட்டீல் வெளியிட்ட அறிக்கை:

ராய்ச்சூர், சிந்தனுாரில் பேமிலி ரிக்ரியேஷன் கிளப் உறுப்பினர் தீபு கவுடா கெஞ்சனகுட்டா, சமீபத்தில் விபத்தில் காலமானார். அவரது நினைவாக, இன்று முதல் மூன்று நாட்கள் பேட்மின்டன் போட்டிகள், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் போட்டியில், வெற்றி பெறும் வீரருக்கு 40,000 ரூபாய், இரண்டாவது பரிசாக 20,000 ரூபாய், மூன்றாவது பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்படும். வெற்றி கோப்பை வழங்கப்படும்.

ஒற்றையர் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 30,000 ரூபாய், இரண்டாவது பரிசாக 15,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 10,000 வழங்கப்படும். வெற்றி பெறும் அணியினருக்கு கோப்பை வழங்கப்படும்.

கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 200 போட்டியாளர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம். ஒற்றையர் பிரிவில் பங்கேற்க 300 ரூபாய், இரட்டையர் பிரிவுக்கு 1,200 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டில் பங்கேற்க விரும்பும் பேட்மின்டன் வீரர்கள், வயது உறுதிப்படுத்த ஆதார் கார்டு கொண்டு வருவது கட்டாயம். போட்டி யாளர்களுக்கு சிற்றுண்டி, உணவு வசதி செய்யப்படும். போட்டிகள் குறித்து தகவல் வேண்டுவோர் 99006 43697, 94484 39333, 95381 23143 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

-நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us