டேக்வாண்டோ போட்டிகள் தங்கம் வென்ற 8 சிறார்கள்
டேக்வாண்டோ போட்டிகள் தங்கம் வென்ற 8 சிறார்கள்
டேக்வாண்டோ போட்டிகள் தங்கம் வென்ற 8 சிறார்கள்
ADDED : செப் 25, 2025 11:12 PM

தசராவை முன்னிட்டு, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில், விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. சிக்கமகளூரில் நடந்த டேக்வாண்டோ விளையாட்டில், எட்டு சிறார்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.
ஆண்டு தோறும் தசரா நேரத்தில், மைசூரில் மட்டுமின்றி, மாநிலத்தின் பல நகரங்களில், விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. சிறார்களிடம் மறைந்துள்ள திறனை வெளிப்படுத்த, இப்போட்டிகள் உதவுகின்றன. கபடி, கால்பந்து, கோ- - கோ, வாலிபால் என, பல விதமான விளையாட்டுகள் நடக்கின்றன. இவற்றில் டேக்வாண்டோ விளையாட்டும் ஒன்றாகும்.
சிக்கமகளூரு நகரில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை ஒருங்கிணைப்பில், மூன்று நாட்களுக்கு முன், டேக்வாண்டோ போட்டி நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான சிறார்கள் பங்கேற்றனர். சிறுவர்கள் பிரிவில் உதய் ராஜ், தன்மய், மனோஜ் அர்ஸ் விவேக், சரண் வெவ்வேறு பிரிவுகளில் விளையாடி தங்கப்பதக்கம் வென்று, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறுமியர் பிரிவில் இம்பனா, ஜோய்லின், ரம்யா தங்கள் எதிராளிகளை தோற்கடித்து, பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தனர். தங்கம் வென்று, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டிக்காக சிறுவர் - சிறுமியரை தயார் செய்த பயிற்சியாளர் யஷ்வந்த், இவர்களின் சாதனையை கண்டு, மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
டேக்வாண்டோ என்பது, கொரியன் போர்க்கலை விளையாட்டாகும். போட்டியாளர்கள் காலால் உதைத்து, கைகளால் குத்தி எதிராளிகளை தாக்கும் விளையாட்டாகும். இதில் வெற்றி பெற மனோ திடம், புத்தி கூர்மை அவசியம்.
- நமது நிருபர் -