UPDATED : ஜூன் 11, 2026 08:04 AM
ADDED : ஜூன் 07, 2026 09:27 AM

பிரவுனி என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஆரோக்கியமான மற்றும் சுவையான கேழ்வரகு பிரவுனி செய்ய, மைதா மற்றும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கேழ்வரகு மாவு, கொக்கோ பவுடர், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, மற்றும் வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து பேக் செய்ய வேண்டும். இது உடலுக்கு நார்ச்சத்து மற்றும் கால்சியத்தை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்:
2 முட்டை 1/2 கப் சர்க்கரை 3/4 கப் சன் பிளவர் ரீபைண்ட் ஆயில் 1/2 கப் கோகோ பவுடர் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் 1/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் 1/2 டேபிள் ஸ்பூன் காப்பித்தூள் 3/4 கப் கேழ்வரகு மாவு 1/4 கப் நறுக்கிய சாக்லேட் துண்டுகள் 2 ஸ்கூப் ஐஸ்க்ரீம் 3 டேபிள்ஸ்பூன் சாக்லெட் சாஸ்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை, அரை கப் சர்க்கரை, முக்கால் கப் சன் பிளவர் ரீபைண்ட் ஆயில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் அரைகப் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும். இதில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், கால் டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர், கால் டீஸ்பூன் உப்பு, அரைடேபிள் ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது இதில் முக்கால்கப் கேழ்வரகு மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் கால்கப் சிறிதாக நறுக்கிய சாக்லெட் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது அதை ஒரு கேக் டின்னில் மாற்றிக் கொள்ளவும். (கேக் டின் மேல் பேக்கிங் ஷீட் போட்டுக்கொள்ளவும்).
இதை ஓவனில் 180 டிகிரி வெப்பத்தில் 25 நிமிடம் முதல்- 30 நிமிடம் வரை பேக் செய்து கொள்ளவும். இப்பொழுது சிசீலிங் தட்டை சூடுபடுத்திய பின் அதன் மேல் ஒரு பிரவுனி துண்டு வைத்துக் கொள்ளவும். அதன்பின் பிரவுனியை துண்டுகளாக்கி, அதனுடன் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் சாஸ் சேர்த்து பரிமாறவும்.
