/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/"என்.ஆர்., பேரவை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார் பற்றி மேலிடத்தில் புகார் செய்யப்படும்'"என்.ஆர்., பேரவை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார் பற்றி மேலிடத்தில் புகார் செய்யப்படும்'
"என்.ஆர்., பேரவை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார் பற்றி மேலிடத்தில் புகார் செய்யப்படும்'
"என்.ஆர்., பேரவை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார் பற்றி மேலிடத்தில் புகார் செய்யப்படும்'
"என்.ஆர்., பேரவை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார் பற்றி மேலிடத்தில் புகார் செய்யப்படும்'
ADDED : டிச 28, 2010 10:47 PM
புதுச்சேரி : 'முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார் மீது புகார் அளிக்கப்படும்' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் என்.டி., மகாலில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தி, தனிக்கட்சி துவங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்த கூட்டத்தில் காங்., கட்சியை சேர்ந்த பலர் பங்கேற்றனர். இதுகுறித்து மத்தியமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரங்கசாமி ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் பல பகுதிகளில் இருந்து காங்கிரசாரும் கலந்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. இதில் பங்கேற்ற காங்கிரசார் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதாக அறிகிறோம். இன்றைய தேதி வரை ரங்கசாமி காங்கிரசில் தான் இருக்கிறார். அவர் அகில இந்திய காங்., கட்சி உறுப்பினர் பதவியில் இன்னும் நீடிக்கிறார். நேற்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. காங்., தலைமை அனுமதியில்லாமல் நடந்த அந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார் மீது மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்திடம் மாநில காங்., தலைவர் சுப்ரமணியம் புகார் அளிப்பார். அதன் அடிப்படையில் காங்கிரஸ் தலைமை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.