பெரியார் பல்கலையில் தேர்வு முடிந்த அடுத்த நாளே ரிசல்ட்
பெரியார் பல்கலையில் தேர்வு முடிந்த அடுத்த நாளே ரிசல்ட்
பெரியார் பல்கலையில் தேர்வு முடிந்த அடுத்த நாளே ரிசல்ட்
ADDED : டிச 29, 2010 06:24 PM
சேலம்: சேலம் பெரியார் பல்கலை துறை தேர்வுகள் முடிந்த அடுத்த நாளே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலை.,யில் கடந்த ஆண்டுகளில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதமும், குளறுபடிகளும் நடந்ததையடுத்து தேர்வுத்துறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி பல்கலை துறைத்தேர்வு, பிரைடு, இணைவு பெற்ற கல்லூரிகள் என மூன்று பிரிவாக பிரித்து, அவற்றுக்கு தனித்தனியே ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். பல்கலை துறைத்தேர்வு ஒருங்கிணைப்பாளராக கம்ப்யூட்டர் துறைத்தலைவர் தங்கவேல் நியமிக்கப்பட்டு, டிசம்பர் 6ம் தேதி தேர்வு துவங்கியது. கடந்த டிசம்பர் 23ம் தேதி தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 24ம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது. துறைத்தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட்டதில், மாணவ, மாணவியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் இன்னும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


