/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/அண்ணாமலையார் கோவிலில் நித்யானந்தா ஏற்படுத்திய பரபரப்புஅண்ணாமலையார் கோவிலில் நித்யானந்தா ஏற்படுத்திய பரபரப்பு
அண்ணாமலையார் கோவிலில் நித்யானந்தா ஏற்படுத்திய பரபரப்பு
அண்ணாமலையார் கோவிலில் நித்யானந்தா ஏற்படுத்திய பரபரப்பு
அண்ணாமலையார் கோவிலில் நித்யானந்தா ஏற்படுத்திய பரபரப்பு
திருவண்ணாமலை : பிறந்தநாளை முன்னிட்டு, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த சாமியார் நித்யானந்தாவை கண்டித்து, கோவில் முன் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து, கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அருணகிரி யோகி மண்டபத்தில், நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் சிறப்பு பூஜை செய்தனர். அங்கு ஒரு மணி நேரம் பூஜை நடந்தது. அப்போது, வெளியூரை சேர்ந்த நித்யானந்தாவின் சீடர்கள், 1,000க்கும் மேற்பட்டோர் வழிபாட்டில் கலந்து கொண்டனர். நித்யானந்தாவின் சீடர்கள் நூற்றுக்கணக்கானோர் அவரை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டனர். இரண்டாவது பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டப வாயில் படியில் நித்யானந்தா அமர்ந்து, சீடர்களுக்கு ஆசி வழங்கி, விபூதி பிரசாதம் கொடுத்தார். அவரது சீடர்கள், காலில் விழுந்து ஆசி பெற்றனர். நித்யானந்தா வெளியே வரும்போது, கறுப்புக் கொடி காட்ட, ராஜகோபுரத்தின் அருகே, கறுப்புக் கொடியுடன் சிலர் திரண்டதால், பீதியடைந்த நித்யானந்தா, தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியே வெளியே சென்றார். விடாமல் பின்தொடர்ந்து சென்ற சில சங்கத்தினர், ரமணாசிரமம் அருகே, நித்யானந்தாவின் காரை வழிமறிக்க முயன்றனர். இதை சற்று தொலைவிலேயே பார்த்த நித்யானந்தா, காரை வேறு பக்கமாக திருப்பி கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றார். இதனால், திருவண்ணாமலை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா பீடத்தில், மாலை 5 மணி அளவில் நித்யானந்தரின் சொற்பொழிவு நடந்தது. பக்தர்களுக்கு அனுமதியில்லை .நித்யானந்தாவுடன் வந்த அனைவரும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள். சொந்த ஊரான திருவண்ணாமலை பக்தர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. கோவிலுக்கு நித்யானந்தா வருவதையொட்டி, மூன்று டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா பீடத்திற்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதவாறு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நித்யானந்தா கோவிலுக்கு வந்ததால், அதிகாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை பக்தர்களை கோவிலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை; வெளியூர் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் அருணகிரியோகி மண்டபத்தில் சிறப்பு பூஜை நடந்தது. 'இது போன்று மற்ற பக்தர்களுக்கும் சிறப்பு பூஜை செய்ய அனுமதிப்பார்களா?' என்று, அங்கு வந்த பக்தர்கள் கேள்வி எழுப்பினர். கோவிலினுள், 'நித்யானந்தருக்கு ஜெ...' என்று கோஷம் எழுப்பியது, முகம் சுளிக்கச் செய்தது. அருணாச்சலேஸ்வரர் கோவிலினுள் அண்ணாமலையாரை மட்டுமே வாழ்த்தி கோஷம் எழுப்பி வழிபடுவது ஆகம விதி வழக்கம்.


