செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியில் மூன்று நாள் எரிசக்தி மாநாடு 2ம் தேதி துவக்கம்
செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியில் மூன்று நாள் எரிசக்தி மாநாடு 2ம் தேதி துவக்கம்
செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியில் மூன்று நாள் எரிசக்தி மாநாடு 2ம் தேதி துவக்கம்
சென்னை : செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளி, பள்ளி மாணவர்களுக்காக மூன்று நாள் தேசிய எரிசக்தி மாநாட்டை, வரும் 2ம் தேதி முதல் நடத்துகிறது.
செயின்ட் ஜான்ஸ் குழும பள்ளிகளின் முதுநிலை முதல்வர் கி÷ஷார் குமார், நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், ஒரு முக்கிய பொருள் குறித்து, தேசிய அளவிலான மாநாட்டை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு எரிசக்தியை சேமிப்பது, எரிசக்திக்கு மாற்றுத் திறனை கண்டறிவது குறித்து, தேசிய அளவிலான மூன்று நாள் மாநாடு, வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடக்கிறது.
பூந்தமல்லி அருகில் உள்ள செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியில், இம்மாநாடு நடைபெறும். ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் என, ஒட்டுமொத்தமாக, 800 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகம் அல்லாமல் ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், அசாம், பீகார், சண்டிகர், சத்திஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட 26 மாநிலங்களில் இருந்து 423 மாணவர்களும், 107 ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர்.
எரிசக்தியை சேமிப்பது மற்றும் அதற்கான மாற்று சக்தியை உருவாக்குவது தொடர்பாக, மாணவர்கள், 620 ஆலோசனைகளை அளித்துள்ளனர். அதில், மிகச் சிறந்த, 62 ஆலோசனைகளை எடுத்துக் கொண்டுள்ளோம். அதில் இருந்து மிகச்சிறந்த மூன்று ஆலோசனைகளை, நிபுணர் குழு தேர்வு செய்யும். அவற்றுக்கு முதல் பரிசாக, 'லேப்-டாப்', இரண்டாவது பரிசாக கேமரா, மூன்றாவது பரிசாக, 'ஐ-பாட்' வழங்கப்படும். பல்வேறு போட்டிகளுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.
இரண்டாம் தேதி காலை 10.30 மணிக்கு, சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட், மாநாட்டை துவக்கி வைக்கிறார். பிற்பகல் நிகழ்ச்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இளைஞர் மேம்பாட்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் மைக்கேல் வேதா சிரோமணி, இந்திய ரூபாயின் சின்னத்தை வடிவமைத்த உதயகுமார் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கி÷ஷார் குமார் கூறினார்.


