/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்புசத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ADDED : டிச 31, 2010 02:04 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றம் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பஞ்சாயத்து யூனியன்களில் 13 சத்துணவு அமைப்பாளர்கள், 33 சமையல் உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.அமைப்பாளர் பணிக்கு பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்று 21- 40 வயதுக்குள் இருக்க வேண்டும், பழங்குடியினர் எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
18-40 வயதுக்குள் இருக்க வேண்டும். நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்பிற்கும் இடையே 3 கிலோ மீட்டர் தூரம் இருக்க வேண்டும் சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். விதவைகள் கணவனால் கைவிடப்பட்டவர்கள் 20-40 வயதுக்குள் இருக்கலாம். சமையல் உதவியாளருக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் 5ம் வகுப்பு படித்திருந்து 21- 40 வயதுக்குள் இருந்தால் போதுமானது. பழங்குடியினருக்கு எழுத படிக்க தெரிந்து 18-40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவைகள் கணவனால் கைவிடப்பட்டவர்கள் 20-40 வயதுக்குள் இருக்கலாம்.தகுதியுள்ளவர்கள் பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஜெராக்ஸ், இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, வருமான சான்று, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டர்களாக இருப்பின் அதற்கான சான்று, உடல் முற்றவர்களாக இருப்பின் அதற்கான சான்றுகளை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 18ம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவு அலுவலகத்தில் உள்ள விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.


