/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தகராறில் தீக்குளித்த தம்பதி படுகாயம்தகராறில் தீக்குளித்த தம்பதி படுகாயம்
தகராறில் தீக்குளித்த தம்பதி படுகாயம்
தகராறில் தீக்குளித்த தம்பதி படுகாயம்
தகராறில் தீக்குளித்த தம்பதி படுகாயம்
ADDED : டிச 31, 2010 02:14 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே குடும்பத்தகராறில் கணவன், மனைவி தீயில் கருகி படுகாயம் அடைந்தனர்.தர்மபுரி, கம்பைநல்லூர் செங்குட்டை சமத்துவப்புரத்தை சேர்ந்த லாரி டிரைவர் நந்தகோபால் (35).
அவரது மனைவி சுதா (25). இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. நேற்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர். தீயில் கருகி படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். கம்பைநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.விசாரணையில் சுதா, 'கணவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்' என, வாக்குமூலம் அளித்தார். அதேபோல் நந்தகோபால், 'என் மீது மனைவி தீ வைத்தபோது அவரை காப்பாற்ற முயன்றதால் தனக்கும் தீக்காயம் ஏற்பட்டது' என, தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.


