Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வெளிநாட்டு வேலை:டாக்டர்களுக்கு அழைப்பு

வெளிநாட்டு வேலை:டாக்டர்களுக்கு அழைப்பு

வெளிநாட்டு வேலை:டாக்டர்களுக்கு அழைப்பு

வெளிநாட்டு வேலை:டாக்டர்களுக்கு அழைப்பு

ADDED : ஜன 01, 2011 12:42 AM


Google News

மதுரை : தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தோஷ் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கை : சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளுக்கு தீவிர கண்காணிப்பு பிரிவு, மயக்க மருத்துவம், அவசர கால மருத்துவம், கதிரியக்க பிரிவுகளுக்கு இரண்டாண்டு அனுபவம் பெற்றவர்கள் தேவைப்படுகின்றனர்.

55 வயதிற்குட்பட்ட ஆலோசகர்கள், 45 வயதிற்குட்பட்ட சிறப்பு டாக்டர்கள், பொதுமருத்துவ பிரிவு டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். ஜன., 6 முதல் 8 வரை, பெங்களூரில் சவுதி அரேபிய தேர்வுக் குழுவினரால், நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பங்கேற்க விரும்புபவர்கள், விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல்களுடன் ovemcl@gmail.com மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு www.omcmanpower.com இணையதளத்திலும், 044 - 2446 4268, 2446 4269ல் தொடர்பு கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us