ஸ்ரீவில்லிபுத்தூர்:இந்திய கம்யூ., தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வீட்டு மனை பட்டா கேட்டு ஸ்ரீவி.,யில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர்கள் பொன்னுப்பாண்டியன்(ஸ்ரீவி.), முருகேசன்(வத்திராயிருப்பு) தலைமை வகித்தனர்.
ராமசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசுகையில்,''ஸ்ரீவி., தொகுதியில் 8000 பேரும், மாவட்டத்தில் 25 ஆயிரம் பேரும் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்து 5 மாதங்களாகியும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை, என்றார். கோவிந்தன், காளியப்பன், வெயிலுமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


