Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் காருடன் 210 கிலோ பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் காருடன் 210 கிலோ பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் காருடன் 210 கிலோ பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் காருடன் 210 கிலோ பறிமுதல்

ADDED : ஜன 01, 2011 10:21 PM


Google News

திண்டுக்கல்:ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் 210 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 4 பேரை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வியாபாரி போல நடித்து ரூ.21 லட்சம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.திண்டுக்கல் கன்னிவாடி அருகேயுள்ள பண்ணைப்பட்டி பரமன்(45), விருப்பாட்சி முருகேஸ்வரி(40), தேனி மாவட்டம் தேவாரம் முருகேசன்(30), மதுரை கீழவெளி வீதி கார் டிரைவர் நீலமேக அமரன்(26) ஆகியோர் ஆந்திராவிலுள்ள பாடகிரி மலையிலிருந்து 210 கிலோ கஞ்சாவை வாங்கி காரில்(டி.எண்: 58 எம்6854) கடத்தி வந்தனர். இதையறிந்த போதை தடுப்பு பிரிவு போலீசார் திண்டுக்கல் சீலப்பாடி அருகே காரை நிறுத்தி திடீர் சோதனை செய்தனர். காரில் 11 மூடைகளில் 210 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.



இவற்றின் மதிப்பு ரூ.21 லட்சம். இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. டி.எஸ்.பி., சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி கூறியதாவது: பரமன், முருகேஸ்வரி, முருகேசன் ஆகியயோர் ஆந்திராவில் கஞ்சாவை வாங்கி திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு விற்பனை செய்யும் ஏஜன்ட்டாக செயல்பட்டனர். மதுரையில் இருந்து கடந்த டிச.28ல் காரை வாடகைக்கு எடுத்தனர். இந்த காருக்கு ரூ.50 ஆயிரம் வாடகை பேசினர். கார் டிரைவர் கஞ்சா கடத்துவதற்கு உடந்தையாக இருந்துள்ளார். ஆந்திராவுக்கு கார் செல்லும் போது அங்கு போலியான நம்பர் பிளேட் தயாரித்து காரில் பொருத்தியுள்ளனர்.



இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. 210 கிலோ கஞ்சாவை முருகேஸ்வரிக்கு 80 கிலோ, பரமன், முருகேசனுக்கு தலா 65 கிலோ பிரிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்களிடம் நானும், இன்ஸ்பெக்டர் முத்துமணி, எஸ்.ஐ., சந்திரசேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரிகள் போல நடித்து, கார் செல்லும் வழிகளை கண்டுபிடித்தோம். இவர்கள் யாரிடம் வியாபாரம் செய்கின்றனர். தமிழகத்தில் இவர்களுக்கு தொடர்புள்ள முக்கிய புள்ளிகள் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us