ADDED : ஜன 02, 2011 03:56 AM
மோகனூர்: இலவச பொங்கல் பை வழங்கும் விழா, மோகனூர் யூனியன் பேட்டப்பாளையம் பஞ்சாயத்து ரேஷன் கடையில் நடந்தது.தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் தங்கவேலு தலைமை வகித்தார்.
விற்பனையாளர் பொன்னுசாமி வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் குணசேகரன், திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யூனியன் சேர்மன் நவலடி இலவச பொங்கல் பைகளை வழங்கினார். இக்கடையில் உள்ள 850 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச பொங்கல் பை வழங்குவதற்காக பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விழாவில், 850 ரேஷன் கார்டுதாரர்களுக்கு யூனியன் சேர்மன் நவலடி இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், வி.ஏ.ஓ., புவனேஸ்வரி, மக்கள் நலப்பணியாளர் வளர்மதி, பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.


