ADDED : ஜன 02, 2011 04:03 AM
சேலம்: சேலம் ஸ்ரீ சாய் சத்சங்கம் சார்பில் உலக நன்மைக்காக சப்தாஹ யக்ஞம் நேற்று துவங்கியது.இறைவன் திருநாமங்களையும், தோற்றங்களையும் அவருடைய பேரன்பு, பெருங்கருணை, குற்றங்களைப் பொருத்தருளல் போன்ற குணங்களையும் பக்தர்கள் கூடி ஆத்மார்த்தமாக பக்தி சிரத்தையுடன் பாடுவது நாம சங்கீர்த்தனம்.
இதை ஏழு நாட்கள் இரவு பகல் இடைவிடாது பாடுவதை சப்தாஹ யக்ஞம் என்கின்றனர்.சேலம் சாய் சத்சங்கம் சார்பில் உலக நன்மைக்காக நேற்று தெய்வீகம் திருமண மண்டபத்தில் சப்தாஹ யக்ஞம் துவங்கியது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய யக்ஞத்தில், சென்னை வத்ஸ ஜெயராம சர்மாஜி 'சீதா கல்யாணம்' பற்றி பேசினார்.இன்று (ஜன.,2) காலையில் சென்னை கிருத்திகா பரத்வாஜ் 'புரந்தரதாசர் சரித்திரம்' பற்றியும், வத்ஸ ஜெயராம சர்மாஜி 'கவுரி கல்யாணம்' பற்றியும் பேசுகின்றனர். 3ம் தேதி மாலையில் குடவாசல் ராமமூர்த்தி ' அகிலம் உய்ய அழகன் வந்தான்' என்னும் தலைப்பில் பேசுகிறார். 4ம் தேதி மாலையில் பெங்களூரு முகுந்த் மித்ரா மண்டலி குழுவினர் 'சாயி பஜன்' என்னும் தலைப்பில் பேசுகின்றனர். 5ம் தேதி மாலையில் திருச்சி அறிவொளி ' அது அதுவாக வரும்' என்னும் தலைப்பிலும், 6ம் தேதி மாலையில் சென்னை வீரமணி ராஜூ குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.
ஜன.,7 மாலையில் சென்னை பாகவத சூடாமணி, சிரோன்மணி, கல்யாண மார்க்க பந்து குழுவினரின் பக்தி பாடல் கச்சேரியும், 8ம் தேதி மாலையில் சத்திசாயி பல்கலை முன்னாள் மாணவர்களின் பஜனை நடக்கிறது. 9ம் தேதி காலையில் நாம சப்தாஹ யக்ஞம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து ராதா திருக்கல்யாண மஹோத்ஸவத்தை கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவில் பட்டாச்சாரியார் சுதர்சன் நடத்துகிறார்.மங்கள ஆராத்தி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் சாய் சத்சங்க சாய் நடராஜன் தலைமையிலான நிர்வாகிகள் செய்துள்ளனர்.


