/உள்ளூர் செய்திகள்/சேலம்/தங்கத் தோடு திருட்டு மேட்டூரை சேர்ந்த2 பேர் கைதுதங்கத் தோடு திருட்டு மேட்டூரை சேர்ந்த2 பேர் கைது
தங்கத் தோடு திருட்டு மேட்டூரை சேர்ந்த2 பேர் கைது
தங்கத் தோடு திருட்டு மேட்டூரை சேர்ந்த2 பேர் கைது
தங்கத் தோடு திருட்டு மேட்டூரை சேர்ந்த2 பேர் கைது
ADDED : ஜன 02, 2011 04:05 AM
மேட்டூர்: கொளத்தூர் நகைக்கடையில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பு தங்கத்தோடு திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.கொளத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, நித்யா நகைக்கடை உள்ளது.
கடந்த நவம்பர் 23ம் தேதி நகைக்கடைக்கு சென்ற இரு நபர்கள் அங்கிருந்த 17 ஜோடி தங்கத் தோடுகளை திருடி விட்டு தலைமறைவாகி விட்டனர். நகைக்கடை உரிமையாளர் முத்துசாமி கொளத்தூர் போலீஸில் புகார் செய்தார்.விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் நகைக்கடையில் திருடிய மேட்டூர் சேலம்கேம்ப், ராஜீவ்நகரை சேர்ந்த சேகர் (50), செந்தில் (30) இருவரையும் கைது செய்து, 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 17 தங்கத் தோடுகளை பறிமுதல் செய்தார்.


