Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ADDED : ஜன 03, 2011 12:33 AM


Google News

கோயம்பேடு: ஓட்டல், கிளப், மாளிகை என, புத்தாண்டு வசதியாக கொண்டாடப்பட்ட வேளையில், முற்றிலும் மாறுபட்ட வகையில் ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன், கோயம்பேடு பிருந்தாவன் நகர் பொதுமக்கள், புத்தாண்டை கொண்டாடினர்.திருமுல்லைவாயலில் உள்ள, 'மை சில்ட்ரன் பவுண்டேஷன்' எனும் ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்த ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்றோர்களில் 80 சதவீதம் பேர், மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.இந்நிலையில், 2011ம் ஆண்டு புத்தாண்டு, சென்னை முழுவதும் ஓட்டல், கிளப்களில் வசதியான முறையில் களைகட்டியது. இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விக்கும் விதத்தில், திருமுல்லைவாயல் ஆசிரமத்தில் உள்ள 25 குழந்தைகளை அழைத்து, அவர்களுடன் கோயம்பேடு பிருந்தாவன் நகர் பொதுமக்கள், புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.பிருந்தாவன் நகரில் வசிக்கும் குழந்தைகள் அவர்களுடன் இணைந்து விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டு, மாலை வேளையில் கேக் வெட்டப்பட்டு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டு பரிசாக, பிருந்தாவன் நகரில் வசிப்பவர்கள் சார்பில், 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக கொடுக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us