Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஏரி ஆக்கிரமிப்பால் மண்ணுக்கு தட்டுப்பாடு : மண்பாண்ட சங்க மாநில தலைவர் தகவல்

ஏரி ஆக்கிரமிப்பால் மண்ணுக்கு தட்டுப்பாடு : மண்பாண்ட சங்க மாநில தலைவர் தகவல்

ஏரி ஆக்கிரமிப்பால் மண்ணுக்கு தட்டுப்பாடு : மண்பாண்ட சங்க மாநில தலைவர் தகவல்

ஏரி ஆக்கிரமிப்பால் மண்ணுக்கு தட்டுப்பாடு : மண்பாண்ட சங்க மாநில தலைவர் தகவல்

ADDED : ஜன 03, 2011 01:04 AM


Google News

தர்மபுரி: ''ஏரிகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் மண்பாண்டங்கள் செய்வதற்கு மண்ணுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,'' என, மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டையில் மண்பாண்ட உற்பத்தியாளர் சங்க கிளை திறப்பு விழா நடந்தது. மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஆயிசெட்டி வரவேற்றார். மாநில இணைச்செயலாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார்.



குலாளர் சங்க மாநில தலைவர் நாராயணன் பேசியதாவது: மண்பாண்டத்தில் உணவு சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதற்கு பலதரப்பட்ட மக்கள் சான்று வழங்கியுள்ளனர். ஆனால், இன்று மண்பாண்டங்கள் வாங்கி சமையல் செய்யும் பழக்கம் மக்கள் மத்தியில் குறைந்து விட்டது. இதனால், மண்பாண்டங்கள் தொழில் நலிவடைந்து வருகிறது. ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதால் மண் கிடைக்காமல் மண்பாண்ட தொழிலாளர்கள் சிரமம்பட்டு வருகின்றனர்.



இதனால், பலர் மாற்று தொழிலுக்கு மாறி வருகின்றனர். மண்பாண்ட தொழிலை நவீனப்படுத்த பயிற்சி நிலையங்களை மாவட்டங்கள் தோறும் அமைக்க வேண்டும். மழை காலங்கள், வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில், ஏரிகளில் மண் எடுக்க முடியாது. இந்த காலத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். சமத்துவபுரங்களில் வீடு வழங்கும் போது இரண்டு சதவீதம் குலாளருக்கு வழங்க வேண்டும். குலாளர் சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரசு உதவி வழங்க வேண்டும். சிறுபான்மையினர் மக்களுக்கு கூட்டுறவு கடன்கள் அரசு தள்ளுபடி செய்தது. அதேபோல் குலாளர் சமுதாயத்தினர் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். குலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us