ADDED : ஜன 04, 2011 09:50 PM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த ஆதனூர் மதுரா குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தனம்(50).
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை(35) என்பவருக்கும் பணப் பிரச்னையால் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 30ம் தேதி ஏழுமலை இவரது தம்பிகள் சக்திவேல், கணேசன் ஆகியோர் தனத்தை ஆபாசமாக பேசி தாக்கினர். புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்தனர்.


