/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பல்லடம் அருகே சாலை விபத்து; எஸ்.ஐ., உட்பட இருவர் பலிபல்லடம் அருகே சாலை விபத்து; எஸ்.ஐ., உட்பட இருவர் பலி
பல்லடம் அருகே சாலை விபத்து; எஸ்.ஐ., உட்பட இருவர் பலி
பல்லடம் அருகே சாலை விபத்து; எஸ்.ஐ., உட்பட இருவர் பலி
பல்லடம் அருகே சாலை விபத்து; எஸ்.ஐ., உட்பட இருவர் பலி
ADDED : அக் 14, 2011 01:19 AM
பல்லடம் : பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்த குமாரசாமி (54), பாலசுப்ரமணி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வடவேடம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பாதுகாப்பு பணியை முடித்து விட்டு ஸ்டேஷன் திரும்பினர்.
அங்கிருந்து பல்லடம் வருவதற்காக, அவ்வழியாக வந்த பல்லடத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தும் முத்துகுமார்(36) என்பவருக்கு சொந்தமான 'பொலிரோ' காரில் 'லிப்ட்' கேட்டு ஏறினர். கார், நள்ளிரவு 1.40 மணிக்கு சின்ன வடுகபாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, முன்னால் சென்ற காற்றாலைக்கு இறக்கை ஏற்றி வந்த டிரைலர் லாரியின் பின்பக்கம் எதிர்பாராதவிதமாக மோதியது. இவ்விபத்தில், சிறப்பு எஸ்.ஐ., குமாரசாமி, காரில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் கடை மேலாளர் சிவக்குமார் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த மற்றொரு சிறப்பு எஸ்.ஐ., பாலசுப்ரமணி, எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் முத்துக்குமார், ஊழியர் லட்சுமணன் (23) காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


