/உள்ளூர் செய்திகள்/சேலம்/கல்லூரி மாணவியை 2வது திருமணம் செய்த வாலிபர் முதல் மனைவியுடன் தற்கொலைகல்லூரி மாணவியை 2வது திருமணம் செய்த வாலிபர் முதல் மனைவியுடன் தற்கொலை
கல்லூரி மாணவியை 2வது திருமணம் செய்த வாலிபர் முதல் மனைவியுடன் தற்கொலை
கல்லூரி மாணவியை 2வது திருமணம் செய்த வாலிபர் முதல் மனைவியுடன் தற்கொலை
கல்லூரி மாணவியை 2வது திருமணம் செய்த வாலிபர் முதல் மனைவியுடன் தற்கொலை
ADDED : ஜூலை 13, 2011 03:24 AM
மேட்டூர்: கல்லூரி மாணவியை இரண்டாவது திருமணம் செய்த தறி தொழிலாளியிடம் இருந்து பெற்றோர் மகளை பிரித்து சென்றனர்.
விரக்தியடைந்த தொழிலாளி, மனைவியுடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, மேல்சிந்தாமணியூர் கிராமத்தை சேர்ந்தவர் தறி தொழிலாளி சுப்ரமணி (34). மனைவி தனலட்சுமி (25). தம்பதியருக்கு திருமணமாகி எட்டு ஆண்டு ஆகிறது. காயத்ரி (6) என்ற மகள் உள்ளார்.தனலட்சுமியின் தாய் நிர்மலா வீடு மேல்சிந்தாமணியூரில் உள்ளது. தனலட்சுமியின் சித்தி, அவரது கணவர் செல்வராஜ் குடும்பத்துடன், பெரம்பலூர் அடுத்த பூலாம்பாடியில் வசிக்கின்றனர். இவர்களின் மகள் சுஜாதா (19). மாணவி சுஜாதா அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்தார்.குடும்ப பிரச்னை காரணமாக சுஜாதாவை, அவரது பெற்றோர் மேல்சிந்தாமணியூரில் உள்ள நிர்மலா வீட்டில் விட்டு சென்றுள்ளனர். மூன்று மாதமாக சுஜாதா மேல்சிந்தாமணியூரில் உள்ள தன் பெரியம்மா நிர்மலா வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது சுப்ரமணிக்கும், சுஜாதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.சுஜாதாவை இரண்டாவது திருமணம் செய்ய சுப்ரமணி முடிவு செய்தார். அதற்கு மனைவி தனலட்சுமியும் சம்மதித்தாக தெரிகிறது. கடந்த 10ம் தேதி சுப்ரமணி திருநாள்ளாறுக்கு சுஜாதாவை அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள பெருமாள் கோவிலில் சுஜாதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, நேற்று முன்தினம் மேல்சிந்தாமணியூருக்கு வந்துள்ளார்.தகவல் அறிந்த சுஜாதா தந்தை செல்வராஜ் மேல்சிந்தாமணியூருக்கு வந்துள்ளார். அங்கு இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. முடிவில், சுஜாதாவை பெற்றோர், தங்களுடன் பூலாம்பாடி அழைத்து சென்று விட்டனர். இரண்டாம் திருமணம் செய்த சுஜாதா பெற்றோருடன் சென்றது சுப்ரமணியை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.மேலும், சுப்ரமணி கல்லூரி மாணவியை இரண்டாம் திருமணம் செய்ததை கண்டு உறவினர்கள், அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். அவமானம் தாங்காத சுப்ரமணி, தனலட்சுமி இருவரும் நேற்று அதிகாலை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.மேச்சேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடலை கைப்பற்றினர். இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


