Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாவட்டத்தில் 15 யூனியன்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: மாவட்ட கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் 15 யூனியன்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: மாவட்ட கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் 15 யூனியன்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: மாவட்ட கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் 15 யூனியன்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: மாவட்ட கலெக்டர் தகவல்

ADDED : ஜூலை 13, 2011 03:34 AM


Google News

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 15 யூனியன்களில், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:2011-12ம் ஆண்டு, முதல் தவணையாக கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசிகள் கால்நடை பராமரிப்புத் துறையினரால் பெறப்பட்டது.

தடுப்பூசி போடும் பணிகள், கால்நடை பராமரிப்பு துறை பணியார்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.மாவட்டத்தில், 15 யூனியன்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும், 11ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் துவங்கியுள்ளது. மூன்று வாரத்துக்கு நடக்கும் முகாமில், 3 லட்சத்து 20 ஆயிரம் கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மூன்று குக்கிராமங்களை மையமாக கொண்டு, பசு எருமைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு குக்கிராமத்திலும், ஒரு நாள் வீதம் ஒரு கிராம பஞ்சாயத்தில், மூன்று நாள் முகாமிட்டு கிராமத்தில் உள்ள அனைத்து பசு எருமைகளுக்கும் இலவசமாக, கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.தடுப்பூசி போடும் நாள் விவரம் உள்ளிட்டவை, இரு தினங்களுக்கு முன், அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவரால், கிராமத்தில் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு முகாமும், அந்தந்த கிராமத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் இதைப் பயன்படுத்தி, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us