/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பத்தில் தேங்கும் குப்பைகள் : தனியார் மயமாக்குவதே தீர்வுகம்பத்தில் தேங்கும் குப்பைகள் : தனியார் மயமாக்குவதே தீர்வு
கம்பத்தில் தேங்கும் குப்பைகள் : தனியார் மயமாக்குவதே தீர்வு
கம்பத்தில் தேங்கும் குப்பைகள் : தனியார் மயமாக்குவதே தீர்வு
கம்பத்தில் தேங்கும் குப்பைகள் : தனியார் மயமாக்குவதே தீர்வு
ADDED : ஜூலை 13, 2011 10:33 PM
கம்பம் : கம்பம் நகரில் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
குப்பை சேகரம் செய்யும் பணியை தனியார் மயமாக்குவதே தீர்வு என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. ஏராளமான தெருக்கள் உள்ளது. குப்பைகள் அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல், சேகரமாகும் குப்பைகளை அள்ளி குப்பை கிட்டங்கியில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சுகாதார பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். நகரில் விஸ்தரிப்பு பகுதிகள் அதிகரித்தும், மக்கள் தொகை அதிகரித்தும் வருகிறது. அனுமதிக்கப்பட்ட 135 துப்புரவு பணியாளர்களை வைத்துக் கொண்டு பொதுச்சுகாதார பணிகளை நகராட்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அனுமதிக்கப்பட்டதிலும் 24 துப்புரவு பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது 111 பேர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் மெடிக்கல் லீவு, அவசர விடுப்பு என்று பலர் சென்று விடுகின்றனர்.
இதனால் நகரில் சாக்கடை சுத்தம் செய்தல், சேகரமாகும் குப்பைகளை அள்ளுதல் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு துப்புரவு பணியாளருக்கு மாதச் சம்பளமாக ரூ. 7 ஆயிரத்து 541 நகராட்சியால் வழங்கப்படுகிறது. காலியாக உள்ளவர்களின் சம்பளத்தை கணக்கிட்டு, தனியார் மயமாக்கலுக்கு பயன்படுத்தலாம். இதனால் குப்பைகள் அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வது தொய்வின்றி மேற்கொள்ளப்படும். நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் நகராட்சிகளின் மண்டல இயக்குநருடன் ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்க வேண்டும்.


