/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை.தாலுகா அலுவலகம் முன்தொழிலாளி குடும்பத்துடன் "தர்ணா'பாளை.தாலுகா அலுவலகம் முன்தொழிலாளி குடும்பத்துடன் "தர்ணா'
பாளை.தாலுகா அலுவலகம் முன்தொழிலாளி குடும்பத்துடன் "தர்ணா'
பாளை.தாலுகா அலுவலகம் முன்தொழிலாளி குடும்பத்துடன் "தர்ணா'
பாளை.தாலுகா அலுவலகம் முன்தொழிலாளி குடும்பத்துடன் "தர்ணா'
ADDED : ஜூலை 23, 2011 02:29 AM
திருநெல்வேலி:பாளை.தாலுகா அலுவலகம் முன்பு தனது ரேஷன் கார்டிற்கு
மண்ணெண்ணெய் வழங்கும்படி கூலித்தொழிலாளி குடும்பத்துடன் 'தர்ணா'வில்
ஈடுபட்டார்.பாளை.குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் முருகன்(50).
கூலித்தொழிலாளி.
இவர் நேற்று தனது குடும்பத்துடன் மண்ணெண்ணெய் கேனுடன் பாளை.தாலுகா
அலுவலகத்திற்கு வந்தார். திடீரென மண்ணெண்ணெய் கேனுடன் 'தர்ணா'வில்
ஈடுபட்டார். தகவல் கிடைத்ததும் பாளை.தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வெளியே
வந்து தர்ணாவில் ஈடுபட்ட முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது
அவர்,''மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 'பல்க்'கில் தனது ரேஷன்கார்டிற்கு
மண்ணெண்ணெய் தர மறுக்கிறார்கள். இதுபோல் பலரது ரேஷன் கார்டுகளுக்கும்
மண்ணெண்ணெய் வழங்காமல் அங்குள்ள ஊழியர்கள் முறைகேடாக விற்பனை செய்து
வருகின்றனர். இந்த மாதம் இதுவரை எனது ரேஷன் கார்டிற்கு மண்ணெண்ணெய்
வழங்கப்படவில்லை. ''என்றார்.விசாரணை நடத்திய அதிகாரிகள், முருகனின் ரேஷன்
கார்டிற்கு உடனடியாக மண்ணெண்ணெய் வழங்கும்படி அங்குள்ள பல்க் ஊழியர்களிடம்
தெரிவித்தனர். இதையடுத்து முருகன் 'தர்ணா' கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.புட்நோட்: ரேஷன்கார்டிற்கு
மண்ணெண்ணெய் வழங்க கோரி, பாளை.தாலுகா அலுவலகம் முன் கூலித்தொழிலாளி
குடும்பத்துடன் 'தர்ணா'வில் ஈடுபட்டார்.


