/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மரவள்ளிக்கு மானிய விலையில் உரம்: விவசாயிகள் எதிர்பார்ப்புமரவள்ளிக்கு மானிய விலையில் உரம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
மரவள்ளிக்கு மானிய விலையில் உரம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
மரவள்ளிக்கு மானிய விலையில் உரம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
மரவள்ளிக்கு மானிய விலையில் உரம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 26, 2011 11:17 PM
சிறுபாக்கம் : மரவள்ளி பயிருக்கு மானிய விலையில் உரம் கிடைக்குமா என மங்களூர், நல்லூர் ஒன்றிய விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களில் 100க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தங்களின் நீர் பாசன நிலங்களில் தோட்டக்கலை பயிரான மரவள்ளி கிழங்கு பயிர்களான பர்மா, குங்கும ரோஸ், வெள்ளை ரோஸ் ரகங்களை பயிர் செய்து வருகின்றனர். ஒரு வருட பயிரான மரவள்ளி கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பயிரிடப்பட்டது. மரவள்ளிச் செடிகள் தற்போது வளர்ச்சியடைந்த நிலையில் எதிர் வரும் மாதத்தில் பருவ மழை துவங்க உள்ளதால், அதற்கான அடியுரமிடும் ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். பொட்டாஷ், டி.ஏ.பி., சூப்பர், யூரியா ஆகியவை தட்டுப்பாடு மற்றும் கடும் விலையேற்றம் உள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் உரம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.