Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திசையன்விளையில் பா.ஜ.,கூட்டம்

திசையன்விளையில் பா.ஜ.,கூட்டம்

திசையன்விளையில் பா.ஜ.,கூட்டம்

திசையன்விளையில் பா.ஜ.,கூட்டம்

ADDED : ஜூலை 28, 2011 01:46 AM


Google News

திசையன்விளை : திசையன்விளை நகர பா.ஜ.,கூட்டம் நடந்தது.திசையன்விளை நகர பா.ஜ.,கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மாளவியா வித்யாகேந்திரம் பள்ளியில் நடந்தது.

ஒன்றிய இளைஞரணி தலைவர் இலமுருகன் தலைமை வகித்தார். ராதாபுரம் ஒன்றிய செயலாளர் தர்மர் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி தலைவி சாந்தி ராகவன், முன்னாள் வர்த்தக அணி தலைவர் மகாராஜா, ராமசுந்தரபாண்டியன், க.உவரி பஞ்., தலைவர் ராஜன், பொன்னையாநாடார், சிற்றம்பலபாண்டியன், ஒன்றிய அமைப்பு தலைவர் சேர்மத்துரை, தங்கத்துரை, நோபல், ராஜேந்திரன், முருகேசன், லிங்கேஸ்வரன், ராமையாநாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், திசையன்விளை பஸ் ஸ்டாண்டினுள் இலவச கழிப்பிடம் கட்ட பஞ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.



திசையன்விளை இட்டமொழி ரோடு, உடன்குடி ரோடு, இடையன்குடி ரோடு, மன்னார்புரம் ரோடு ஆகியவற்றில் ஆக்ரமிப்புகளை அகற்றி, ரோடு ஓரமாக இருக்கும் மணல்களை அகற்றி, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு வசதி செய்து, காலை, மாலை நேரம் போக்குவரத்துகளை சரிசெய்ய வேண்டும்.சுவசேஷபுரத்தில் இருந்து புத்தன் தருவை செல்லும் ஓடைகளில் ஆக்ரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வர இருக்கும் டவுன் பஞ்., தேர்தலில் முன்னாள் பஞ்., தலைவர் சாந்தி ராகவன் போட்டியிட இக்கூட்டம் பரிந்துரை செய்கிறது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us