ADDED : ஆக 06, 2011 10:26 PM
தேனி:இந்திய விமானப்படைக்கு நவம்பர் மாதம் படைவீரர்கள் தேர்வு செய்யப்பட
உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த, 1991 ஜனவரி முதல்
தேதி முதல் 1995 பிப்ரவரி 28க்குள் பிறந்த, திருமணம் ஆகாத இளைஞர்கள் குரூப்
எக்ஸ் டெக்னிக்கல் டிரேட்களில் படைவீரராக பணியாற்ற தேர்வு
செய்யப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் -2ல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 50
சதவீதம் மார்க் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, அரசு
அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் இன்ஸ்ட்டிட்யூட்டில் மூன்றாண்டு டிப்ளமோ
படித்து 50 சதவீதம் மார்க் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை 'சென்ட்ரல்
ஏர்மென் செலக்ஷன் போர்டு, போஸ்ட் பாக்ஸ்நம்பர் 11807, நியூடெல்லி-110 010'
என்ற முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களை,
தாம்பரத்தில் உள்ள, ஏர்மென் செலக்ஷன் சென்டர், ஏர்போர்ஸ் ஸ்டேஷன் தாம்பரம்,
சென்னை- 600 046 என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 044-22796565 என்ற
போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.


