Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கண்மாய் ஆக்கிரமிப்பு தண்ணீர் தேக்க சிரமம்

கண்மாய் ஆக்கிரமிப்பு தண்ணீர் தேக்க சிரமம்

கண்மாய் ஆக்கிரமிப்பு தண்ணீர் தேக்க சிரமம்

கண்மாய் ஆக்கிரமிப்பு தண்ணீர் தேக்க சிரமம்

ADDED : ஆக 22, 2011 12:22 AM


Google News
வருஷநாடு : கடமலை-மயிலை ஒன்றியம், நரியூத்து ஊராட்சிக்கு உட்பட்ட செங்குளம் கண்மாய் சுமார் 147 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளது.இக்கண்மாயினை சில ஆண்டுகளாக தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்தும், அதில் வருவாய் தரக்கூடிய இலவமரம், கொட்டை முந்திரி, தென்னை சாகுபடி விவசாயம் மற்றும் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.இதனால் மழைக்காலங்களில் போதுமான தண்ணீரைத்தேக்கி வைக்க முடியவில்லை.

தங்கம்மாள்புரம், நரியூத்து, செங்குளம் ஆகிய பகுதி விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இக்கண்மாயினை சுற்றியுள்ள மானாவாரி விவசாயிகளும் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இக்கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கொடுத்துள்ளனர்.விவசாயிகள் சிலர் கூறுகையில்,'இக்கண்மாயினை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இதனால் எங்களது விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதிகளவில் விவசாய சாகுபடி செய்ய முடியவில்லை. ஆக்கிரமிப்பினை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us