/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திமுக இளைஞரணிசார்பில் பேச்சு போட்டி: 752 மாணவர்கள் பங்கேற்புதிமுக இளைஞரணிசார்பில் பேச்சு போட்டி: 752 மாணவர்கள் பங்கேற்பு
திமுக இளைஞரணிசார்பில் பேச்சு போட்டி: 752 மாணவர்கள் பங்கேற்பு
திமுக இளைஞரணிசார்பில் பேச்சு போட்டி: 752 மாணவர்கள் பங்கேற்பு
திமுக இளைஞரணிசார்பில் பேச்சு போட்டி: 752 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : செப் 03, 2011 11:54 PM
திருநெல்வேலி : அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு ஜங்ஷன் மதிதா இந்து கல்லூரி நடந்த பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டிகளில் 752 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திமுக., இளைஞரணி அறக்கட்டளை சார்பில் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் ஜங்ஷன் மதிதா இந்து கல்லூரி பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் துரை, சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி செயலாளர் புதுக்கோட்டை விஜயா நடுவராக பங்கேற்றார். திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் சம்பத் போட்டிகளை மேற்பார்வையிட்டார். இதில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், பாளை., மண்டல சேர்மன் சுப.சீத்தாராமன், முன்னாள் எம்எல்ஏ., அப்பாவு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து நடந்த பேச்சு போட்டியில் 207 பேரும், கட்டுரை போட்டியில் 245 பேரும், கவிதை ஒப்புவித்தல் போட்டியில் 300 பேரும் என மொத்தம் 752 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பேச்சு போட்டியில் வள்ளியூர் விவேகானந்தா கேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவி சந்திரா உதயா முதலிடத்தையும், நல்லூர் மேற்கு மேல்நிலைப்பள்ளி மாணவி மெர்லின் சிந்துஜா 2ம் இடத்தையும், சங்கரன் கோவில் கோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி மாணவர் வினோத் 3ம்இடத்தையும் பிடித்தனர். கவிதை ஒப்புவித்தல் போட்டியில் புளியங்குடி கண்ணா மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி முதலிடத்தையும், இடைகால் மீனாட்சிசுந்தரனார் மேல்நிலைப்பள்ளி மாணவர் குருசாமி 2ம் இடத்தையும், பாளை., பார்வையற்றோர் பள்ளி மாணவி தவசி ராணி 3ம் இடத்தையும் பிடித்தனர். மேற்கண்ட போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த மாணவருக்கு 10 ஆயிரம் ரூபாயும், 2ம் இடம் பிடித்தவருக்கு 5 ஆயிரமும், 3ம் இடம்பிடித்தவருக்கு 2ஆயிரத்து 500ம், ஆறுதல் பரிசாக 10பேருக்கு தலா ஆயிரமும் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடதக்கது.


