/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழாமாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழா
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழா
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழா
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழா
ADDED : செப் 04, 2011 02:01 AM
சிறுபாக்கம்:மாற்றுத் திறனாளிகளுக்கான இரு சக்கர மற்றும் மூன்று சக்கர
சைக்கிள்கள் வழங்கும் விழா மங்களூர் ஒன்றிய வளாகத்தில் நடந்தது.மாவட்ட
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார்.முடவியல் நீக்க
வல்லுனர் பாலசுந்தரம், பி.டி.ஓ.,க்கள் கலியபெருமாள், செல்வநாயகி முன்னிலை
வகித்தனர். மேலாளர் காமராஜ் வரவேற்றார்.திட்டக்குடி எம்.எல்.ஏ., தமிழ்அழகன்
125 மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு சக்கர, மூன்று சக்கர சைக்கிள்களை
வழங்கிப் பேசினார்.
விழாவில் தே.மு.தி.க., ஒன்றிய நிர்வாகிகள் ராஜமாணிக்கம், செல்வகுமார்,
திருமால், சுரேஷ், முரளி, குமார், ஜெயக்குமார், இளையராஜா உட்பட பலர்
பங்கேற்றனர்.


