Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அண்ணா பிறந்தநாள் மாநில மாநாடுநெல்லையில் இன்று வைகோ ஆலோசனை

அண்ணா பிறந்தநாள் மாநில மாநாடுநெல்லையில் இன்று வைகோ ஆலோசனை

அண்ணா பிறந்தநாள் மாநில மாநாடுநெல்லையில் இன்று வைகோ ஆலோசனை

அண்ணா பிறந்தநாள் மாநில மாநாடுநெல்லையில் இன்று வைகோ ஆலோசனை

ADDED : செப் 07, 2011 03:36 AM


Google News
திருநெல்வேலி:நெல்லையில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (7ம்தேதி) கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.அண்ணா பிறந்தநாளையொட்டி 15ம்தேதி நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் மதிமுக சார்பில் மாநில மாநாடு நடக்கிறது. மாநாடு பணிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநாடு குறித்து இன்று மாலை 3 மணிக்கு நெல்லை ஜங்ஷன் சரஸ்வதி லாட்ஜில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

துணை பொதுச்செயலாளர் நாசரேத் துரை, மாவட்டச்செயலாளர்கள் பெருமாள், சரவணன், ஜோயல், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நிஜாம், மாணவர் அணி ராஜேந்திரன், விவசாய அணி துணை செயலாளர் கல்லத்தியான், மாவட்ட துணைச்செயலாளர் மின்னல் முகமதுஅலி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். நிர்வாகிகள் மாநாட்டிற்கு நிதி வழங்குகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us