/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வாக்காளர் அடையாள அட்டை கோரும் விண்ணப்பம் அதிகரிப்புவாக்காளர் அடையாள அட்டை கோரும் விண்ணப்பம் அதிகரிப்பு
வாக்காளர் அடையாள அட்டை கோரும் விண்ணப்பம் அதிகரிப்பு
வாக்காளர் அடையாள அட்டை கோரும் விண்ணப்பம் அதிகரிப்பு
வாக்காளர் அடையாள அட்டை கோரும் விண்ணப்பம் அதிகரிப்பு
ADDED : செப் 07, 2011 10:52 PM
ராமநாதபுரம் : உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர் அடையாள அட்டை கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகின்றன.
உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை பெற கடைசிவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் பலருக்கு அட்டை வழங்கப்படவில்லை. தேர்தல் முடிந்ததும், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களின் பெயர் உள்ளாட்சி பட்டியலில், இதுவரை சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தாலுகா அலுவலகங்களில், புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற, விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. வழக்கமாக தினமும் 15க்கும் குறைவாக விண்ணப்பங்கள் வரும் நிலையில், தற்போது 60க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 'கடைசி நேரத்தில் இவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம்' என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


