ADDED : செப் 08, 2011 10:23 PM
கோவை : 'மதுக்கரை மார்க்கெட்டில் நூலக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்று கோரி, மாவட்ட கலெக்டரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்
மனு கொடுத்துள்ளனர்.மதுக்கரை மார்க்கெட்டில், அரசு பகுதி நேர நூலகம் வாடகை
கட்டடத்தில் செயல்படுகிறது.
இந்த கட்டடம் பழுதடைந்துள்ளதால், மழையில்
புத்தகங்கள் நனைந்து வீணாகின்றன. நூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டக்கோரி
மனு கொடுத்ததன் விளைவாக, ஐந்தாண்டுக்கு முன் பேரூராட்சி சந்தைப்பேட்டை
காலியிடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், நூலகத்துறையில் நிதி இல்லாத காரணத்தால்,
கட்டடம் கட்டப்படவில்லை. இது குறித்து, மதுக்கரை மார்க்கெட் இந்திய
கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர்,
கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நூலகத்துறையினரிடம் விசாரித்த கலெக்டர்
கருணாகரன், எம்.எல்.ஏ., தொகுதி நிதியை கோரிப்பெற்று கட்டடம் கட்ட நடவடிக்கை
எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


