Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மழைக்கு முன் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நவீனப்படுத்தும் பணி நிறைவேறுமா

மழைக்கு முன் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நவீனப்படுத்தும் பணி நிறைவேறுமா

மழைக்கு முன் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நவீனப்படுத்தும் பணி நிறைவேறுமா

மழைக்கு முன் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நவீனப்படுத்தும் பணி நிறைவேறுமா

ADDED : செப் 09, 2011 10:56 PM


Google News

ராமநாதபுரம் : மழைகாலத்திற்கு முன், ராமநாதபுரம் பெரிய கண்மாயை நவீனப்படுத்தும் பணிகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

ராமநாதபுரம் பெரியகண்மாய் மூலம் 3953 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த கண்மாய் நவீனப்படுத்த 9 கோடியே 73 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நபார்டு வங்கி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணி, தொருவளூர் வரத்துக்கால்வாய், பெரிய ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மடைகள் கட்டுதல், 10 கி.மீ., தூரத்திற்கு கரைகளை பலப்படுத்தும் பணி உட்பட பல பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. மழை காலத்திற்கு முன்பாக முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. பெரிய கண்மாயின் தென் கலுங்கு அமைக்கும் பணி, அஸ்திவாரம் அளவிலேயே நின்றுவிட்டது. முதுநாள் பகுதி விவசாயி மலைச்சந்திரன் கூறியதாவது:

காருகுடி அருகே வரத்துக்கால்வாய் பணி முடியவில்லை. கண்மாய் தூர்வாரும் பணி, பெயருக்கு நடக்கிறது. கலுங்குகள் உடைந்து உள்ளதால், மழை பெய்தாலும் தண்ணீர் வெளியேறும். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல் கூறியதாவது: தென்கலுங்கு கான்கீரீட் பணிகள், ஓரிரு நாட்களில் முடிந்து விடும். தூண்கள் பணி செப்.30க்குள் முடிந்து விடும், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us