Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு அனிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு அனிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு அனிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு அனிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

ADDED : செப் 10, 2011 03:44 AM


Google News
தூத்துக்குடி : டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நேற்று விசாரணைக்கு வந்த எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட பல மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டது.

டில்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்ததில் பலர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த தூத்துக்குடி துறைமுகத்தை சேர்ந்த பத்ரன் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழகம்,புதுச்சேரி போன்ற மாநிலங்களில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன்படி தூத்துக்குடி கோர்ட்டிலும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷனில் எம்எல்ஏ., அனிதா மீது 3 வழக்குகளில் கைது செய்து திருச்சிசிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து மனுக்கல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக நேற்று மீண்டும் இந்த கோர்ட்டில் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக அரசு தரப்பிலும், மனுதார் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனிதாவின் மனு விசாரணை வரும் 12ம் தேதிக்கு நீதிபதி பிரபுதாஸ் ஒத்திவைத்தார். இது போன்று தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த பல மனுக்களும் ஒத்திவைக்கப்பட்டது.

தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே

மேலூர் ரயில்வே ஸ்டேஷன் விரைவில் மாற்றம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேஷன் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாற்றப்பட உள்ளது. அதற்கு முன்னோட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நேற்று ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேஷன் மிகவும் இட நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்துடன் ஸ்டேஷனில் வண்டி நிற்கும் போது கூட இரண்டாம் கேட் அடைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நகருக்குள் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. தூத்துக்குடி கிழூர் ரயில்வே ஸ்டேஷன் மிக பக்காவாக இருந்தாலும் சென்னையில் இருந்தும், பெங்களூரில் இருந்தும், நெல்லையில் இருந்தும் தூத்துக்குடிக்கு ரயில்கள் வரும் போது மேலூர் ரயில்வே ஸ்டேஷன் வரும் போது ரயில் பெட்டிகள் முழுமையாக காலியாகிவிடும். நகரின் மையப்பகுதியில் இவை இருப்பதால் எல்லா பயணிகளும் இங்கு இறங்கிவிடுவர்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போது மட்டும் கிழூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று தான் எல்லா பயணிகளும் ஏறுவர். இந் நிலையில் மேலூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இடநெருக்கடியை போக்கும் வகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி ஆடடிக்கும் இடத்தின் எதிரே மேலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மாற்றப்படுகிறது. இந்த பணிகளை பார்வையிட நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் தூத்துக்குடி வந்தார். மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருடன் ஸ்டேஷன் இடமாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து டிஸ்கஸ் செய்தார். பின்னர் தூத்துக்குடி கிழூர் ரயில்வே ஸ்டேஷனில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் கோச்கள் பழுது பார்க்கும் செட், பிட்லைன் அமைக்கும் பணி போன்றவற்றை ஆய்வு செய்தார்.

ரயில்வே குடியிருப்பு பகுதியில் மழைகாலத்தில் தண்ணீர் தேங்குவதும், கழிவுநீர் சரியாக செல்லாமல் இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதனால் அந்த குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் மேலூர் ரயில்வே ஸ்டேஷன் இடம் மாறும் இடத்தையும் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு செய்தார்.

மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோட்ட பொறியாளர் சேகர், தூத்துக்குடி ரயில்வே இன்ஜினியர்கள் யூசப், முருகன், பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம், இண்டியன் சேம்பர்ஸ் கோடீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ரயில்வே துறைக்குரிய அனைத்து பணிகளுக்கும் மாநகராட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று கூடுதல் கோட்ட மேலாளரிடம் மாநகராட்சி கமிஷனர் உறுதியளித்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us