/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
ADDED : செப் 16, 2011 01:25 AM
மடத்துக்குளம்:மடத்துக்குளத்தில் போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்புக்கு
சுற்றுச்சுவர் இல்லாததால், விஷஜந்துக்கள் உலா வரும் இடமாகவும்
மாறிவருவதோடு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் பாதுகாப்பின்றி
உள்ளது.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வளர்ந்து வரும் நகரம். இந்நகரம்
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக மடத்துக்குளம் போலீசார்
வாடகை வீடுகளில் குடியிருந்து வந்தனர். தங்களுக்கு காவலர் வீட்டு வசதி
வாரியத்தின் மூலமாக குடியிருப்புகள் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை
வைத்தனர்.
இதையடுத்து, காவலர் வீட்டு வசதி வாரியத்தினர், மடத்துக்குளம்
போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே உள்ள இடத்தில் காவலர் குடியிருப்பு கட்ட
தீர்மானித்து ரூ.74 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு
காவலர்களுக்காக 10 குடியிருப்புகளும், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோருக்கு
தனியாக இரு குடியிருப்புகளும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலேயே கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.கட்டுமானப்பணிகள் முடிந்து பல மாதங்கள்
திறக்கப்படாமல் இருந்த குடியிருப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனால் திறக்கப்பட்டது. இரண்டு மாடிகள்
கொண்டதாக கட்டப்பட்ட குடியிருப்பு சுற்று சுவர் இல்லாமல்
உள்ளது.மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டில், குடியிருப்புகளுக்கு மத்தியில்
இருக்கும் 'டாஸ்மாக்' மதுக்கடைக்கு வரும் குடிமகன்கள் சுற்றுசுவர் இல்லாமல்
அருகில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தை திறந்த வெளி'பாராக'
பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் இருந்து காவலர் குடியிருப்பு,போலீஸ் ஸ்டேஷன் வரை
சுற்று சுவர்கள் இல்லாமல் இருப்பதால் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட
வாகனங்கள் பாதுகாப்பின்றி உள்ளது.போலீசார் கூறியதாவது:சுற்று சுவர்
இல்லாமல் இருப்பதால் குடியிருப்பு பாதுகாப்பின்றி உள்ளது. அருகில்
முட்புதர்கள் இருப்பதால் அங்கிருந்து வரும் விஷபூச்சிகள் வீடுகளுக்குள்
சென்று விடும் நிலை உள்ளது. இதற்கு தீர்வாக காவலர் குடியிருப்பு, போலீஸ்
ஸ்டேஷனுக்கு சுற்றுசுவர் கட்டித்தர காவலர் குடியிருப்பு வாரியத்தினர்
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.உயரதிகாரிகள் மனது வைப்பார்களா?
மடத்துக்குளம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
போலீஸ் ஸ்டேஷன் முன்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையும் பின்பகுதியில்
திறந்தவெளியும் அமைந்துள்ளது. திறந்தவெளிக்கு அருகில் அதிகளவு முட்புதர்கள்
வளர்ந்துள்ளன. இதனால் குடியிருப்பு பகுதி, ஸ்டேஷனுக்கு சுற்றுசுவர்
அமைத்தால் போலீசாருக்கு பாதுகாப்பாக இருக்கும். இது குறித்து உயர்
அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.


