/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/செங்கோட்டையில் கட்டட வேலை செய்த தொழிலாளி தவறி விழுந்து பலிசெங்கோட்டையில் கட்டட வேலை செய்த தொழிலாளி தவறி விழுந்து பலி
செங்கோட்டையில் கட்டட வேலை செய்த தொழிலாளி தவறி விழுந்து பலி
செங்கோட்டையில் கட்டட வேலை செய்த தொழிலாளி தவறி விழுந்து பலி
செங்கோட்டையில் கட்டட வேலை செய்த தொழிலாளி தவறி விழுந்து பலி
ADDED : செப் 16, 2011 01:50 AM
தென்காசி : செங்கோட்டையில் கட்டட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி தவறி கீழே விழுந்து பலியானார்.
தென்காசி பாறையடி தெருவை சேர்ந்தவர் சாமி (35). இவர் செங்கோட்டை பம்பு ஹவுஸ் ரோட்டில் வசித்து வந்தார். கட்டட தொழிலாளியான இவர் செங்கோட்டையில் கட்டட பணியில் ஈடுபட்டிருந்தார். சுவர் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பு சாரத்தின் மீது சாமி நின்று வேலை பார்த்துள்ளார். அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாமி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பற்றி செங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாமிக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.


