Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/உச்சிநத்தம்-வி.சேதுராஜபுரம் இடையே மேம்பாலம்: எம்.எஸ்.பாலகிருஷ்ணன்

உச்சிநத்தம்-வி.சேதுராஜபுரம் இடையே மேம்பாலம்: எம்.எஸ்.பாலகிருஷ்ணன்

உச்சிநத்தம்-வி.சேதுராஜபுரம் இடையே மேம்பாலம்: எம்.எஸ்.பாலகிருஷ்ணன்

உச்சிநத்தம்-வி.சேதுராஜபுரம் இடையே மேம்பாலம்: எம்.எஸ்.பாலகிருஷ்ணன்

ADDED : செப் 28, 2011 11:50 PM


Google News

சாயல்குடி : ''உச்சிநத்தம்-வி.சேதுராஜபுரம் இடையே மேம்பாலம் அமைப்பேன்,'' என உச்சிநத்தம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் எம்.எஸ்.பாலகிருஷ்ணன் கூறினார்.இவர், கடலாடி ஒன்றியம் உதவி தேர்தல் அலுவலர் கணேசனிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின் கூறியதாவது:உச்சிநத்தம்-குமாரசக்னாபுரம் ரோடு ஒரு கோடி ரூபாயில் எனது முயற்சியில் போட்டுள்ளேன்.

என் சொந்த செலவில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கட்டடம், மூன்றரை ஏக்கர் நிலம் கொடுத்துள்ளேன். ரூ.55 லட்சம் மதிப்பில் பிற்பட்டோர் மாணவர்கள் விடுதி, ரூ.85 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணி எனது முயற்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் எனது முயற்சியில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெற்றி பெற்றால் மாணவிகளுக்கு விடுதி, தெரு முழுக்க கழிவுநீர் வாய்க்கால், ரோடு அமைக்க பாடுபடுவேன். உச்சிநத்தம்-வி.சேதுராஜபுரம் இடையே மேம்பாலம் அமைப்பதற்கு பாடுபடுவேன். 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப துணை சுகாதார நிலையம் விரிவு படுத்தவும், சூரங்குடி-பெருநாழி இருவழிச் சாலையாக விரிவு படுத்தவும் முயற்சிப்பேன், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us