Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/"இந்தியாவுடனான நட்பால் பாக்., உறவு பாதிக்காது'

"இந்தியாவுடனான நட்பால் பாக்., உறவு பாதிக்காது'

"இந்தியாவுடனான நட்பால் பாக்., உறவு பாதிக்காது'

"இந்தியாவுடனான நட்பால் பாக்., உறவு பாதிக்காது'

ADDED : அக் 05, 2011 10:18 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி : இந்தியாவுடனான எங்களின் நட்பு, பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல'என, ஆப்கன் அதிபர் கர்சாய் கூறினார்.

'அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்' என்ற அமைப்பு சார்பில், ஆர்.கே.மிஸ்ரா நினைவு சொற்பொழிவு டில்லியில் நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் பேசியதாவது: பாகிஸ்தானும், நாங்களும் இரட்டை சகோதரர்கள். அதேநேரத்தில், இந்தியா எங்களின் நல்ல நண்பன். இந்தியாவுக்கும், எங்களுக்கும் இடையேயான நட்பு காரணமாகவோ, இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாகவோ, பாகிஸ்தானுடனான எங்களின் உறவு, எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இந்தியாவுக்கும், எங்களுக்கும் இடையேயான நட்பை, பாகிஸ்தானுக்கு எதிரானதாக கருதக் கூடாது. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல.

இந்தியாவுடனான நட்பு, புதிய விஷயம் அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, எங்களுக்கு ஏராளமான உதவிகளை இந்தியா செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் விஷயங்களை, எழுத்துப்பூர்வமாக நேற்று பதிவு செய்துள்ளோம். அவ்வளவு தான். இவ்வாறு கர்சாய் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us