/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட அமைச்சர் அறிவுரைகருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட அமைச்சர் அறிவுரை
கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட அமைச்சர் அறிவுரை
கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட அமைச்சர் அறிவுரை
கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட அமைச்சர் அறிவுரை
ADDED : அக் 06, 2011 09:40 PM
வால்பாறை : ''கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்படவேண்டும்,''
என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.
வால்பாறை நகராட்சி தேர்தலில்
அ.தி.மு.க.,சார்பில் தலைவர் பதவிக்கு செல்வி விஜயராஜன் வேட்பாளராக
போட்டியிடுகிறார். இது தவிர 21 வார்டுகளிலும் அ.தி.மு.க.,வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர். தேர்தல் பணி குறித்து ஆய்வு செய்ய தமிழக தொழில்துறை
அமைச்சர் வேலுமணி வால்பாறை வந்தார். அதன் பின்னர் நடந்த
அ.தி.மு.க.,நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: உள்ளாட்சி
தேர்தலில் கட்சியினர் அயராது பாடுபடவேண்டும். கட்சியில் வேட்பாளர்கள்
நிறுத்துவதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அதை மறந்து வெற்றிக்காக
பாடுபடவேண்டும். குறிப்பாக நாம் ஆளும் கட்சியாக இருப்பதால் தலைவர் பதவிக்கு
போட்டியிடும் வேட்பாளரை ஜெயிக்க வைப்பது அவசியம். சின்ன சின்ன பிரச்னைகளை
மறந்து வேட்பாளர்களின் வெற்றிக்காக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றார்.
பொள் ளாச்சி எம்.பி.சுகுமார், வால்பாறை சட்டசபை தொகுதி செயலாளர் அமீது, நகர
செயலாளர் மயில்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


