ஜெராக்ஸ் ரூபாய் கொடுத்து ஏமாற்றிய சென்னை கும்பல்
ஜெராக்ஸ் ரூபாய் கொடுத்து ஏமாற்றிய சென்னை கும்பல்
ஜெராக்ஸ் ரூபாய் கொடுத்து ஏமாற்றிய சென்னை கும்பல்
ADDED : அக் 07, 2011 03:23 AM
திண்டுக்கல் : குறைந்த வட்டியில், 1 கோடி ரூபாய் கடன் தருவதாக, ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்கள் கொடுத்த கும்பலை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை விளக்குத்தூணில் ஜவுளிக்கடை நடத்துபவர் உசேன்பாட்சா, 50. குறைந்த வட்டியில் பணம் தேவை என, பத்திரிகையில் விளம்பரம் செய்தார். சென்னையைச் சேர்ந்த விஜயபாரதி, சந்துரு, பாலகுரு ஆகியோர், இவரை தொடர்பு கொண்டு, '50 காசு வட்டியில், 1 கோடி ரூபாய் தருகிறோம். இதற்கான பத்திரச் செலவு தொகை, 2.5 லட்சத்தை, திண்டுக்கல் லாட்ஜில் தர வேண்டும்' எனக் கூறினர்.
கடந்த 4ம் தேதி, திண்டுக்கல் வந்த உசேன் பாட்சா, பணத்தை கொடுத்தார். மூவரும், 50 லட்ச ரூபாய் இருப்பதாகக் கூறி, ஒரு பையை தந்தனர். இதை வீட்டில் சென்று பார்த்த போது, கட்டின் முன்பகுதி, பின்பகுதி மட்டுமே, 500 ரூபாய் இருந்தது. நடுப்பகுதியில் ஜெராக்ஸ் நோட்டுக்கள் இருந்தன. இதுகுறித்து, திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரனிடம் புகார் செய்தார். ஏமாற்றிய கும்பலை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


