Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ஊழலற்ற நிர்வாகம் சுகாதாரத்திற்கு முதலிடம்

ஊழலற்ற நிர்வாகம் சுகாதாரத்திற்கு முதலிடம்

ஊழலற்ற நிர்வாகம் சுகாதாரத்திற்கு முதலிடம்

ஊழலற்ற நிர்வாகம் சுகாதாரத்திற்கு முதலிடம்

ADDED : அக் 11, 2011 12:53 AM


Google News
தேனி : ஊழலற்ற நிர்வாகத்திற்கும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் பாடுபடுவேன், என அரண்மனைப்புதூர் ஊராட்சி தலைவருக்கு ஏணி சின்னத்தில் போட்டியிடும், டாக்டர் ரமணிக்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஒரு டாக்டர் என்ற முறையில் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவேன். தெருக்களில் சுகாதாரகேடு அதிகம் உள்ளது. ரோட்டோரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிட வசதிகள் செய்து கொடுப்பேன். ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்த்து வைப்பேன். தினமும் குடிநீர் வழங்கப் படும். புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். ரோடு வசதி,தெருவிளக்கு வசதி செய்து தரப்படும். கிராமங்களுக்கு மினிபஸ் வசதி செய்து தருவேன். அரசு வழங்கும் நிதியை முழுமையாக பயன் படுத்தி, முதலர்வரின் திட்டங்களை நிறைவேற்றுவேன். இலவச மிக்சி, கிøண்டர், மின்விசிறி, ஆடு மாடு வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ளவர் களுக்கு பெற்றுத்தருவேன். ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி அளிப்பேன். இளைஞர்கள், அரசு வேலைகளில் சேரும் வகையில், டி.என்.பி.எஸ்.சி., வி.ஏ.ஓ., கிரேடு-2, 4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என் றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us