Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆசிய நீச்சல் ‌போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய நீச்சல் ‌போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய நீச்சல் ‌போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய நீச்சல் ‌போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்

UPDATED : அக் 11, 2011 09:23 AMADDED : அக் 11, 2011 02:22 AM


Google News
புதுடில்லி: இந்தோனேஷியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் 7-வது ஆசிய நீச்சல் போட்டி நடை‌பெற்றது. போட்டியில் இந்தியா உட்பட ஆசியாவின் பல்வேறு நாடுகளின் சார்பில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி பிரெஸ்ட் ஸ்ட்‌ரோக், பட்டர்பிளை ஸ்ட்‌ரோக், ப்ரீ ஸ்டைல், பேக்ஸ்ட்ரோக் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் ஆண்களுக்கான பிரஸ்ட் ஸ்ட்‌ரோக் 50 மீட்டர் பரிவில் சந்தீப் செஜ்வால் தங்கப்பதக்கத்தையும் மற்றும் 100மீ பட்டர்பிளை பிரிவில் வீர்தவால்காதே தங்கப்பதக்கத்தையும் பெற்றனர். அதே போல் சவ்ரப் சங்‌வேகர்200 மீ ப்ரீ ஸ்டடைலில் வெண்கலப்பதக்‌கத்தையும், ரேகன்‌போன்சா200மீ பேக்ஸ்ட்‌ரோக் பிரிவில் வெண்கலப்பதக்‌கத்தையும் பெற்றனர். மேலும் பெண்களுக்கான ப்ரீ ஸ்டைல்பரிவில் சுரபிதிப்‌ரே 400மீ ப்ரீஸ்டைலில் வெண்கலப்பதக்‌கத்தையும் வென்றுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us