/உள்ளூர் செய்திகள்/மதுரை/அரசு நலத்திட்டங்கள் வீடு வரும் :சுயே., வேட்பாளர் பெரியசாமிஅரசு நலத்திட்டங்கள் வீடு வரும் :சுயே., வேட்பாளர் பெரியசாமி
அரசு நலத்திட்டங்கள் வீடு வரும் :சுயே., வேட்பாளர் பெரியசாமி
அரசு நலத்திட்டங்கள் வீடு வரும் :சுயே., வேட்பாளர் பெரியசாமி
அரசு நலத்திட்டங்கள் வீடு வரும் :சுயே., வேட்பாளர் பெரியசாமி
ADDED : அக் 13, 2011 01:10 AM
திருவேடகம் : ''திருவேடகம் ஊராட்சியில் அரசு நலத்திட்டங்கள் வீடு தேடி
கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தலைவர் வேட்பாளர் பெரியசாமி
கூறினார்.அவர் கூறியதாவது: திருவேடகத்தை சுகாதாரமான, சுற்றுலா தலமாக
உருவாக்கப்படும்.
விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க ரூ.7.5 கோடியில்
சோழவந்தான் வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட முயற்சி எடுக்கப்படும். மக்கள்
கோரிக்கையை ஏற்று குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். கண்மாய்கள்
காப்பாற்றப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரம் கிடைக்க
செய்யப்படும். திருமால் நத்தத்திற்கு கூட்டு குடிநீர் கிடைக்கும். திருமண
மண்டபம், நூலகம், இளைஞர்களுக்காக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். சாக்கடை
வாய்க்கால் கட்டி, குப்பைகள் அற்ற ஊராட்சியாக மாற்றப்படும். அரசின்
அனைத்து நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு கிடைக்க செய்வேன். முதியோர் பென்ஷன்,
ரேஷன்கார்டு, வசதியற்றவர்களுக்கு வீடு, திருமண உதவி பணம் கிடைக்க
பாடுபடுவேன். மக்கள் குறைகளை எந்த நேரமும் என்னிடம் தெரிவிக்கலாம்,
என்றார்.


